Ganesan Karuppaiya
PortfolioWritingResumeContact

செஞ்சுரியனே!!

A Tamil poem about a my son.
Published

Reading time

1 min read

Topics
Tamil PoetryTamilPoetryLife
செஞ்சுரியனே!!

சிலநொடி உறக்கம் செல்லும் பகையில்லா கோபம் கொள்ளும் கள்ளமில்லா குறுநகையால் வெல்லும் மொழியில்லா வார்த்தைகள் சொல்லும்

நளினமில்லா நாட்டியதால் உலவும் கருணைசிறு விரலால் வருடும் அளவிலா அன்பில் படரும் பார்வையால் இதயம் நெருடும்

செம்பொன்னிட்டதேக இனியனே செய்வழி மடிசேர்ந்த முன்னவனே கார்விழியனே இளஞ்செழியனே என்றும் குன்றாதிரு செஞ்சுரியனே..

Back to all articles