Ganesan Karuppaiya
PortfolioWritingResumeContact

நகராமல் நட்சத்திரம் , நினைவெல்லாம் நின் சித்திரம்

So let it be, like we once said When our days on Earth are through, We'll become stars in the same old sky And I'll stay close to you. Not far away. Not really gone. Just light... Still travelling home.
Published

Reading time

2 min read

Topics
Tamil PoetryPoetry
நகராமல் நட்சத்திரம் , நினைவெல்லாம்  நின் சித்திரம்

நள்ளிரவில் நடைபயணம்
நாள் முழுதும் மடிக்கணினியுடன் மன்றாடி
நித்திரை வராமல் நிலாமுற்றம் வர

நடுவானில் மூன்று நட்சத்திரங்கள் ஒருங்கே
நான் அப்போது அவற்றின் பெயர்கள் அறியேன்
நினைத்துக்கொள்வேன் அதன் ஆயுளை

நான் எந்தையைக் கேட்டேன் ,
நறுமுகையோடு எல்லோருமே நம்முன்னோர்கள்
நம்மை அன்பில் பிணைக்கும் என்றார்

நகர்ந்தது நாட்கள், நகரங்கள், நபர்கள் ஆனால்
நகராமல் அந்த நட்சத்திரங்களின் ஒளி
நிலையாக யுகம் கழித்தும் நெஞ்சம் சேர்ந்தது

நேற்றைய பொழுதை அவை பிரதிபலிக்கவில்லை
நேற்றைய நினைவுகளை என்னிடம் மீள்சுற்றுகின்றன
நேசம் கொண்டவர்கள் கணங்களை நித்தம்

நவ்விபருவம் நண்பர்களோடு நதிக்கரை நள்ளிரவில்
நாததோடு நீந்தி, எதிற்காலம் எண்ணி
நங்கைகளை நினைவுகூர்ந்து, களித்தோம்

நகர்ந்தது நாட்கள், நகரங்கள், நபர்கள்
நாடோடிபோல் நாட்கள் நிரப்பி
நகரம் ஓடி நற்றிறம் தேடி, ஒருநாள்

நிலவின் ஒளியில் நங்கை கண்டேன்
நானும் நாணம் கொண்டேன்
நேசம் நெஞ்சம் சேர்ந்திருக்க

நள்ளிரவுத் திரைப்படங்கள் முடிய
நெறிநீர் வங்கக்கரையில் வீற்றிருந்தோம்
நமக்கான நாளையை நெருங்கும் நாளை எண்ணி

நஞ்சம் நிறைந்த நெஞ்சம் வஞ்சனை செய்ய
நங்கை நீயும் நேசம் துண்டித்தாய்
நாளை நமக்கான காத்திருக்கவில்லை

நகர்ந்தது நாட்கள், நகரங்கள், நபர்கள் ஆனால்
நகராமல் அந்த நட்சத்திரங்களின் ஒளி
நிலையாக யுகம் கழித்தும் நெஞ்சம் சேர்ந்தது

தந்தையாய் நான், பாலகன் கையில் திறன்பேசி
திரையை ஏந்தியபடி அறிவியலை அறிவான்,
தூரம், காலம் மற்றும் அதன் திறன் கணித்தான்

நான் புன்னகையோடு புரிவதாய் பாவிக்கின்றேன்
நான் புன்னகையோடு பொழுதுகளை மீள்சுற்றுகின்றேன்
நான் புன்னகையோடு பொழுதுகளை விரயம் செய்கின்றேன்

நட்சத்திரங்கள் எவற்றையெல்லாம் பார்த்திருக்கின்றன
நான் அறிந்ததை அனுபவித்ததை அழிந்ததை அடைந்ததை
நான் அவைகளுக்குக் கோரிக்கை வைக்கின்றேன்

நினைவுகள் நிலைத்து இருக்கட்டும், நின் நிலை
நான் அடைந்தால், கடந்து வந்த பாதையை
நான் உனதருகில் இருந்து காண்பேன்

எந்தையை இளைஞனாய்,
என்னையும் சமுத்திரத்திற்கு அருகே
எண்ணிக்கொள்வேன் இன்னும்,

நம்மைத் தொட்ட ஒளி, எங்கோ விண்வெளியில்
நடமாடிக்கொண்டிருக்கம், அங்கு சென்று அதை காண்போம்
நாம் மீநிகழுணர்வினில் மீளாதிருப்போம்

நாம் முன்பே பேசியதுபோல இருக்கட்டும்,
நம் நாட்கள் பூமியில் முடிவுக்கு வரும்போது,
நாமும் நட்சத்திரங்களாவோம், ஒருங்கே.

அதுவரை நகராமல் நட்சத்திரம், நினைவெல்லாம் நின்சித்திரம்

Back to all articles