புன்னகை பிறக்கின்றது
A Tamil poem about the joy of a smile.
Published
Reading time
1 min read

இதோ இதோ இவள் புன்னகை பிறக்கின்றது இனியவள் இதயமும் திறக்கின்றது இதற்காகவே இவன் மனம் தவிக்கின்றது இன்றது இசைந்ததில் துள்ளி குதிக்கின்றது
மன்றாடினேன், மனதிற்குள் திண்டாடினேன் மங்கையினை தினம் நாடினேன் மனமிறங்க மடிஎந்தினேன் மறுத்திடவே முகம் வாடினேன்
என் தாய்தந்த தமிழினை தூக்கினேன் என் ஏக்கத்தை எழுத்தினில் தேக்கினேன் என் பரிவினை பாணம் ஏற்றினேன் எம்மானை அதைகொண்டு தாக்கினேன்
அறிவையின் அகம் கரைந்திடுதே அடியேன் அவலம் மறைந்திடுதே அடடா இது ஆரம்பமே அடங்காதோர் பேரின்பமே