Ganesan Karuppaiya
PortfolioWritingResumeContact

முன்பொரு வேளையிலே மென்பொருள் சோலையிலே

A Tamil poem set in a software park.
Published

Reading time

1 min read

Topics
Tamil PoetryTamilLovePoetry
முன்பொரு வேளையிலே மென்பொருள் சோலையிலே

முன்பொரு வேளையிலே மென்பொருள் சோலையிலே மயக்கும் மாலையிலே மதியென உதித்தாள்,

பின்பொரு நாளினிலே பணி இடைவேளையிலே பெருஞ்சுடர் பார்வையிலே எனதுயிர் பரித்தாள்,

பார்வையிலே பற்றியதோ, பழகிடவே தொற்றியதோ பாவையவள் பேரன்பை பயிரென விதைத்தாள்

நினைவில் நிலவில் நித்தம் தோன்றியே நிஜத்தில் நீயாரோவென்றே தாண்டினாள்

அரக்கி அருகே இருக்கவே, கீச்சலும் கவியாகவே, அரளியும் அமுதாகவே அறிவில் ஆறினி சிதைத்தாள்

அசையும் இமையும் இசையில் கண்களால் அல்லாடவே அழகாய் கைது செய்தாள்

பித்தம்கொண்டே, பின்பே சென்றேன், என்னுள்ளம் பரிசுத்தம் அறியாமல் காயம் தந்தாள்

மன்றாடவே, மறவாமல் தினம் நாடவே மங்கை மனம் மாறவே, எனை ஏற்றாள்

அறிவை அகத்திரை திறந்து,ஆர்ப்பரிப்போடு அடியேனை ஆதனினுள் வீற்றாள்

சிறுக உரையாடி, பெறுக நினைவாடி சிறகுகள் வான்நாடி சேர்ந்தே வந்தாள்

விரல்தீண்டா, விழிதாண்டா, வேள்வித்தீயது உறக்கம் கொஞ்சமே, இரவுகள் திருடினாள்

தாரிகை பார்வையும் தூரிகையே, தேன்மொழி வார்த்தைகளால் வருடினாள்

எமை இறுதி முட்ட ஆளாது, மதியிழந்து எனை இறுதியில் முட்டா ளாகியே சென்றாள்

Back to all articles