ஆயிரம் இரவுகள் கடந்திருக்கும்
A Tamil poem about memories that persist through time.
Published
Reading time
1 min read

ஆவள் அகன்று சென்றாள், எனைவிட்டு அவதியில் நானிருக்க, இருளில்
ஆயிரம் இரவுகள் கடந்திருக்கும்! ஆயினும் நினைவுகள் நிலைத்திருக்கும்.
அகந்தை அகம்சூழ, நேசம்தனை பறிகொடுத்து, அசட்டை எல்லைமீற நெடுந்தூரம் பிரிந்துவந்தோம்
அகழியில் விழுந்து, அகதியாய் அலைந்து, பின் ஆக்கம் பெற்றே நகருதே வாழ்க்கை
அநேகமுகங்கள் மலர்ந்து, மறைந்திருக்கும், நடுவில் ஆயிரம் இரவுகள் கடந்திருக்கும்!
வலிமறந்து வழித்துணையோடு வாசமிக்க வரும்பாதையில் வானிலையில் சிறுமாற்றம்
வானம் சூழ்ந்தது கார்மேகம் சிந்திய மழைதுளி விரைந்து, என்முகம் விழுந்து, படர்ந்ததே
முழுமதி அவள் நினைவை மலர செய்யுதே, முதல்நாள் பார்த்த பரவசம், ஏனோ
மனம் நெருடல் சேர்க்குதே, துவானமே மழைதுளியா, மங்கை நினைவா நீ துரியது
ஆயிரம் இரவுகள் கடந்திருக்கும்! ஆயினும் நினைவுகள் நிலைத்திருக்கும்.