Ganesan Karuppaiya
PortfolioWritingResumeContact

இது மயக்கும் மாலை பொழுது

A Tamil poem about an enchanting evening.
Published

Reading time

1 min read

Topics
Tamil PoetryTamilLovePoetry
இது மயக்கும் மாலை பொழுது

இது மயக்கும் மாலை பொழுது, இனியவள் அருகினில் நில்லா பொழுது, இறுக்கத்தில், இதயத்தில் எழுந்தது பழுது !!

எனது துயரத்தை யாரிடம் சொல்ல, என் அருகினில் அவளும் இல்ல, என்னை தனிமையும் தாக்குது மெல்ல !!

மௌனமே இரைச்சலாய் மோதுதே, மேகங்கள் எனை விலகியே போகுதே, மதியே, பிறையாய் மனமே தேயுதே !!

கவினே நின்புன்னகை இன்பத்தை தூண்டும், கவிசொற்கள் உள்ளதை தீண்டும் , கண்மணி, இதற்கு நீ அருகினில் வேண்டும்

எல்லைகள் கடந்து வருவாய் பெண்ணே எனையே எனக்கு மீட்டு தருவாய் கண்ணே என் உயர் மாய்ந்திடும் முன்னே !!!

Back to all articles